×

4,098 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஒப்புதல்: விரைவில் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 4,098 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ரயில்வேயில் 35 தொழில்நுட்பப் பிரிவுகளில் இளநிலை பொறியாளர், டெப்போ மேற்பார்வையாளர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான முக்கிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக, சமீபத்தில் மண்டலங்களின் காலிப்பணியிட விவரங்களை ஆய்வு செய்ததில் அதிகபட்சமாக நிரந்தர பாதைப் பராமரிப்பு பிரிவில் 845, பணிகள் பிரிவில் 470, கேரேஜ் மற்றும் வேகன் பிரிவில் 450 காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 4,098 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வரும் 21ம் தேதி முதல் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இடஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றி ஆட்சேர்ப்பை விரைவாக முடிக்கவும் மண்டல ரயில்வேக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 6,565 தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Railways ,New Delhi ,Railway Ministry ,
× RELATED மலையாள திரைப்பட நடிகர்...