×

ராமர் கோயில் அறக்கட்டளையின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? 22ம் தேதி கூட்டத்தில் முடிவு

அயோத்தி: ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அடுத்த நிரந்தர பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து வருகிற22ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அயோத்தி ராமர் கோயிலுக்காக திரட்டப்பட்ட நிதி மற்றும் உண்டியல் காணிக்கையில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது.

அந்த குழு நடத்திய விசாரணையில் முதற்கட்ட அறிக்கையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோயில் ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். முறைகேடு விவகாரம் தொடர்பாக ராம ஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமாவை நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இதுக்குறித்து அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறுகையில், முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராய்க்கு நிரந்தர மாற்றாக ஓய்வுபெற்ற இந்திய வனப்பணி அதிகாரி கிருஷ்ணா மோகன் நியமனத்தை நிரந்தரமாக்குவது குறித்து வருகின்ற 22ம் தேதி நடைபெற இருக்கும் அறக்கட்டளையின் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்தும் உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் நன்கொடை திருட்டு.  இதனிடையே பாட்னாவில் உள்ள புகழ்பெற்ற மகாவீர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணியில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கோயில் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

* மூடி மறைப்பு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில்,”சிலர் பதவி விலகுவது மற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த விவகாரம் முழுவதையும் மூடிமறைக்கவும் உண்மையான குற்றவாளிகள் மற்றும் இதில் தொடர்புடைய முக்கிய நபர்களை பாதுகாக்கவும் முயற்சிகள் நடப்பதாக நாட்டு மக்கள் கருதுகின்றனர்”என்று பதிவிட்டுள்ளார்.

* வக்பு விவகாரத்தில் மவுனம் ஏன்?
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர்கோயில் நன்கொடை திருடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சனாதன நம்பிக்கையை தாக்கும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் வக்ப் வாரிய நில விவகாரம் என்று வரும்போது மட்டும் அவர்களின் வாய்கள் பசை போட்டு ஒட்டப்பட்டது போல மூடிக்கிடக்கின்றன என்று விமர்சித்துள்ளார்.

* தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நன்கொடை திருடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Tags : Ram Temple Trust ,Ayodhya ,Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust ,Ayodhya Ram Temple… ,
× RELATED கேரளத்தில் தொடர் மழை வயநாட்டில்...