புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தை வெளியிட்டது. அதிலிருந்த நீதித்துறையில் ஊழல் மற்றும் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் என்ற பாடப்பிரிவுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. நீதித்துறையில் ஊழல், ஒழுங்கீனங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், நீதிமன்றங்களில் மிகப்பெரிய அளவில் வழக்குகள் தேங்கியிருப்பது குறித்தும் பாடப்பிரிவில் இடம் பெற்றிருந்தது.
இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த பாட புத்தகத்திற்கு வெளியிட தடை விதித்தது. இதையடுத்து சர்ச்சைக்குரி பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு புதிய புத்தகத்தை என்சிஇஆர்டி புதிதாக வெளியிட்டுள்ளது.
