பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி பவானி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: தமிழகம் முழுவதுமே விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரியபுலியூர் கூட்டுறவு வங்கி முன்பு முழக்கங்கள் எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதியில் தமிழக விவசாயிகளுடைய கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்தல் வாக்குறுதிப்படி செயல்படாமல் இரண்டு கட்டமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரமும் பெரிய விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரையிலான பயிர் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடன் தள்ளுபடி கிடைக்காததால் விவசாயிகள் பலர் மன உளைச்சலில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. தற்போது இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி தொகையால் 20% விவசயிகள் கூட பயனடைய மாட்டார்கள் எனவே பயிர் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: