திருப்போரூர், ஜூலை 6: திருப்போரூரில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் சார்பில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சைக்கிள் போட்டி நேற்று திருப்போரூர் புறவழிச் சாலையில் நடைபெற்றது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். செயலாளர் விக்னேஷ்குமார் வரவேற்றார். தனி நபர் பிரிவின் கீழ் நடைபெற்ற இந்த போட்டிகளை சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவருமான அரவிந்த் ரமேஷ், திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
