×

பைக் கேட்டு அடம்பிடித்த சிறுவன்..! தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்த பெற்றோர்.. பின் நடந்த விபரீதம்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்ரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக மறுவாழ்வு மைய நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தங்களது மகன் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக சிறுவனின் தந்தை காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதனிடையே உயிரிழந்த 17 வயது சிறுவன் எதற்காக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டான் என்பதற்கான காரணமும் வெளியாகி இருக்கிறது. அந்த 17 வயது சிறுவன் வீட்டில் தொடர்ந்து புதிய இருசக்கர வாகனம் கேட்டு அடம் பிடித்து வந்ததால், அவனை நல்வழிப்படுத்த பெற்றோர் இந்த தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் தான் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மையத்தின் தரப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறுவாழ்வு மைய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சேர்ந்து தங்களது மகனை கடுமையாகத் தாக்கியதால் மரணமடைந்தான் என சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மகன் தாக்கப்பட்டதாக தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீசார் இந்த மர்ம மரணம் குறித்து தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த் பின்னரே, மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும்.

Tags : Nellai ,Wickramasinghapuram ,Ambasamudram ,
× RELATED கால்நடைகளை சாலைகளில் விடும் நபர்கள்...