×

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து: 23 பேர் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர். பேருந்தில் பயணித்த 6 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சேமங்களத்தில், இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குக் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பேருந்தும், சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சேமங்களத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர மோதலில் இரண்டு பேருந்துகளின் முன்பக்கங்களும் பலத்த சேதமடைந்தன.

விபத்தில் சிக்கி 23 பேர் காயமடைந்த நிலையில், இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உட்பட 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai Government Hospital ,Sirkazhi ,
× RELATED ஆளுநர் ஆர்லேகரின் அத்துமீறலுக்கு...