முத்துப்பேட்டை, ஜுலை 3: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைதெருவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ கிராம மக்கள் 125 நாள் வேலை கேட்டு விண்ணப்பிக்கிற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மத்திய அரசின் விபிஜி ராம்ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்,
விபிஜி ராம்ஜி சட்ட நகலை கிழித்து கருப்புக்கொடியுடன் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நேற்று முன் தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். சாலை மறியல் செய்த குற்றத்திற்காக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் (57), நிர்வாகிகள் சீனிவாசன் (65), குழந்தையன்(67), கணேசன் (79), பன்னீர்செல்வம் (55) மற்றும் 10 ஆண்கள், 34 பெண்கள் உட்பட 49 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
