திருவாரூரில் சிஐடியு போராட்டம்

 

திருவாரூர், ஜூலை 3: திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் தமிழ் மாநில சிஐடியு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: