போலியோ சொட்டு மருந்து கொடுப்பதாக ரீல்ஸ்: தவெக நிர்வாகி அடாவடி

 

மதுரை, ஜூலை 3: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாள், ஜூன் 28ல் அனுசரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு துறை ரீதியாக முகாம்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்து வேறு யாரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போல் போட்டோ, ரீல்ஸ் எடுத்துக்கொள்ள கூடாதென, குறிப்பாக தவெகவினர் இதை செய்யக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் விஜய் கட்டளையிட்டிருந்தார்.

ஆனால் இதனை மீறி மதுரை, பெத்தானியாபுரம் 26வது வார்டு தவெக செயலாளர் ராகுல், இப்பகுதியின் ஒரு பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றுவது போல படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க, மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ எஸ்ஆர்.தங்கபாண்டியன் கூறியதன்பேரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது செயல்பாட்டிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: