விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

 

வருசநாடு, ஜூலை 3: கடமலைக்குண்டு அருகேயுள்ள மேலப்பட்டி, மூலக்கடை, உள்ளிட்ட கிராமங்களில் கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னையில் ருகோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு தலைமை வகித்த கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன், தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் தோட்டக்கலை உதவி அலுவலர் நவநீதன் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: