விருதுநகர், ஜூலை 3: சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மின்சார வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை, காவலர் குடியிருப்பு, மீசலூர், அழகாபுரி, கே. செவல்பட்டி, கூரைக்குண்டு, மாடர்ன் நகர், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை, தொழிற்பேட்டை முதலான பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
