ராமநாதபுரத்தில் பாட்டாலியன் போலீஸ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பாட்டாலியன் போலீஸ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்தவர் அசாருதீன் (34), பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார். தற்போது ராமநாதபுரம் சக்கரகோட்டையில் உள்ள மணிமுத்தாறு பட்டாலியன் 12 பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கமாக பயிற்சியில் ஈடுபட்ட இவர் மாலை ஓய்வு நேரத்தில் தனது அறையில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மயங்கி கிடந்ததை பார்த்த சக போலீசார் அவரை உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குடும்ப பிரச்சனை காரணமா அல்லது பனி சுமை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா என கேனிக்கரை போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: