வாலிபர் தற்கொலை

 

சிவகாசி, ஜூலை 2: சிவகாசி அருகே தட்டாவூரணியை சேர்ந்தவர் கதிர்வேல் (44). இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு, மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்ததால் அவர்கள் திருப்பூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்வதாக கூறி, தான் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரிடம் கூறி பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கதிர்வேல் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கதிர்வேல் தூக்கிட்டநிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Related Stories: