திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.2.96 கோடி

 

திருச்செந்தூர், ஜூலை 1: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் மாத உண்டியல் வசூலாக ரூ.2.96 கோடி மற்றும் 620 கிராம் தங்கம் கிடைத்துள்ளது. இத்திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை, கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் நடந்தது. திருக்கோயில் தக்கார் அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டார். இணை ஆணையர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.

துணை ஆணையர் யக்ஞ.நாராயணன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதன்படி உண்டியல் எண்ணிக்கையில் 2 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 122 ரூபாயும் (ரூ.2,96,89,122), தங்கம் 620 கிராம், வெள்ளி 10,825 கிராம், பித்தளை 22,540 கிராம், செம்பு 1,430 கிராம், தகரம் 7,240 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1,502ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.

Related Stories: