தங்கையின் கணவரை கொன்றவர் கைது

 

பழநி, ஜூன் 30: பழநி அருகே சரவணம்பட்டியை சேர்ந்தவர் துர்க்கை ராஜ் (30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுலோச்சனா (28) கருத்து வேறுபாட்டால் சுலோச்சனா கணவரை பிரிந்து புளியம்பட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். துர்க்கை ராஜ் சேர்ந்து வாழ வலியுறுத்தி நேற்று புளியம்பட்டி சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்ேபாது ஆத்திரமடைந்த சுலோச்சனாவின் சகோதரர் பரத் (32) துர்க்கை ராஜை தள்ளி விட்டு அவரது தலையில் கல்லை தூக்கி ேபாட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த துர்க்கை ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீரனூர் போலீசார் பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: