×

பவுர்ணமியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் கிரிவலத்தில் பக்தர்கள் குவிந்தனர்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 30: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று கிரிவலம் நடந்தது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை தொடங்கி வைத்தார். நேற்று மாலை கணக்க விநாயகருக்கு அபிஷேகம், பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகம் நேற்று நடைபெற்றது.

பின்னர் சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பிறகு பிரகதீஸ்வரர் முன்னின்று தீப ஒளி ஏற்றி கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குறுக்கள் தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்து பின்னர் பிரகாரம் வலம் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. பௌர்ணமி கிரிவலத்தில் சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமன்னன் இராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

 

Tags : Krivali ,Pragadishwarar Temple ,Pournami ,Jayankondam ,Krivalam ,Gangaikondashoshpuram Pragadishwarar Temple ,Gangaikondashopuram Pragadishwarar Temple ,Pournami Krivalam ,Jayangondam ,
× RELATED உரக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: போலீசார் விசாரணை