×

பெரம்பலூர் மாவட்டத்தில் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்

 

பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்ட உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ50,000 வழங்க, தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு தமிழ் நாட்டிலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தற்போது மேற்படி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்ப தற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியிலிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளிச் சான்றுகள்), புகைப்படம், இருப்பிடச் சான்று (Nativity Certificate), ஓட்டுநர் உரிமம் (Driving License), வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்த வல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பள்ளிவாசலில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று சரக வக்ஃபு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், வாகனம் வாங்குவதற்கான இருசக்கர வாகனத்தின் விலைப்பட்டியல் / விலைப்புள்ளி, உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 15ம் தேதிக்குள் மேற்படி ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ulamas ,Perambalur district ,Perambalur ,District Collector ,Sharanya Ari ,
× RELATED உரக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: போலீசார் விசாரணை