கருமாதி வீட்டில் ஒப்பாரி வைத்து அழுத பெண்ணை தாக்கியவர் கைது

 

மன்னார்குடி , ஜூன் 30: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு சன்னதி தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி (45). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா (எ) பாரதிதாசன் (38). இருவரும் உறவினர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இறந்த ஜெயராமன் என்பவரின் கருமாதி நிகழ்ச்சி கடந்த 22ம் தேதி நள்ளிரவில் நடந்தது. இதில், மகேஸ்வரி கலந்து கொண்டு மற்ற பெண்களோடு சேர்ந்த ஒப்பாரி வைத்து அழுதுள்ளார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த சின்னப்பா (எ) பாரதிதாசன் எதுக்கு ஒப்பாரி வைத்து அழுகிறாய் என்று கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மகேஸ்வரி காயமடைந்தார். இதுதொடர்பாக திருமக்கோட்டை காவல் நிலையத்தில் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ கோமகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து நன்னிலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: