திருத்தறைப்பூண்டியில் நோயால் பாதித்த கணவர் விஷம் குடித்து சாவு: மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மண்ணை சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் (65). இவரது மனைவி பிரேமா. தங்கவேல் கல்லீரல் நோய் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தவர் உடல்நல குறைவு காரணமாக மனவிரக்தி ஏற்பட்டு கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரது மனைவி பிரேமா, கணவன் மீதான பாசத்தால் அவரும் களைக்கொல்லி மருந்தை குடித்திருக்கிறார். தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தங்கவேல் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார், அவரது மனைவி பிரேமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன விரக்தியில் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்ட தங்கவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: