விக்டோரியா: இந்திய பெருங்கடலை அமைதி, வளம் மற்றும் கூட்டாண்மைக்கான ஒரு “வாய்ப்புப் பெருங்கடலாக” (Ocean of Opportunity) மாற்றுவதே இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அங்கு பேசிய பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடல் நமது பொதுவான இல்லம் என்று நாங்கள் நம்புகிறோம்; அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை நமது கூட்டுப் பொறுப்பாகும். இந்த உணர்வே நமது MAHASAGAR தொலைநோக்கு பார்வையின் அடித்தளம். கடல்சார் பாதுகாப்பும் பொருளாதார செழிப்பும் இணைந்துள்ள ஒரு இந்தியப் பெருங்கடலை உருவாக்க இந்தியா கற்பனை செய்கிறது.
அங்கு நமது கூட்டாண்மை நாடுகளின் அளவைச் சார்ந்ததாக இல்லாமல், பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்; மேலும் நாம் தனித்தனியாகச் செயல்படாமல், ஒன்றிணைந்து முன்னேறுவோம். இந்தியப் பெருங்கடலை வாய்ப்புகளின் பெருங்கடலாக மாற்றுவதே எங்கள் தொலைநோக்கு பார்வை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
இதனிடையே தொழில்கள், இணைப்பு (Connectivity), தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள புதிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட பரஸ்பரம் உறுதியளித்துள்ளன.
