×

துவரங்குறிச்சி அருகே விபத்தில் சிக்கி புள்ளிமான் பலி

 

துவரங்குறிச்சி, ஜூன் 29: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கல்லாமேடு அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு, யார் கையிலும் சிக்காமல் அருகில் உள்ள புதருக்குள் சென்றது. இந்நிலையில் நேற்று காலை வனத்துறையினர் தேடிப் பார்த்த போது அருகில் உள்ள தோட்டத்தின் அருகில் நாய்களால் கடிபட்டு பலத்த இரத்த காயங்களுடன் கிடந்துள்ளது.

இதையடுத்து புள்ளிமானை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் உயிரிழந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு வனப் பகுதியிலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Dhuvarankurichi ,Trichy-Madurai National Highway ,Kallamedu ,Trichy district ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது