விம்பிள்டன் இன்று தொடக்கம்

லண்டன்: பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), ஆகர் பெலிக்ஸ் (கனடா), பென் ஷெல்டன் (அமெரிக்கா), மெட்வதேவ் (ரஷ்யா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.), புப்லிக் (கஜகஸ்தான்), கொபால்லி (இத்தாலி) உள்பட மொத்தம் 112 பேர் களமிறங்குகின்றனர்.

ஜோகோவிச் தனது 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் டாப் 10 வீராங்கனைகள் சபலெங்கா (பெலாரஸ்), ரைபாகினா (கஜகஸ்தான்), ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப் (யுஎஸ்), பெகுலா (யுஎஸ்), அனிசிமோவா (யுஎஸ்), ஸ்விடோலினா (உக்ரைன்), ஆண்ட்ரீவா (ரஷ்யா), முச்சோவா (செக்.), பென்சிக் (சுவிஸ்) உள்பட மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் வைல்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: