×

தெலங்கானாவில் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 கோடி சொத்து குவித்த பெண் தாசில்தார்: வங்கியில் ரூ.38 லட்சம், ரூ.1.20 கோடி தங்கம் பறிமுதல்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷமிர்பேட் தாசில்தாராக சுசரிதா பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 26ம் தேதி, ஒரு கோப்பு அனுமதி தொடர்பாக ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் 30 ஏக்கருக்கு ரூ.30 லட்சம் என லஞ்சம் கேட்டாராம். இதற்கு ரூ.2 லட்சத்தை முன்பணமாகப் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் தாசில்தார் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஐதராபாத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கீசரா, கானாமேட்டில் உள்ள இரண்டு வீட்டு மனைகள் ஆகியவை சுசரிதாவுக்கு உள்ளதை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சுசரிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது ரூ.12 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.38 லட்சம் இருப்பு, 2 கார்கள் மற்றும் ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர். சொத்துக்களின் சந்தை மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

 

Tags : Telangana ,Tahsildar ,Tirumala ,Sucharita ,Shamirpet, Hyderabad, Telangana ,
× RELATED குடியுரிமைக்கான முழுமையான சான்றாக...