×

ஜூலை 1ல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகிறார்

புதுடெல்லி: இந்தியா-ஜப்பான் இடையே 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி ஜூலை 1ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா-ஜப்பான் இடையே ஆண்டு தோறும் நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாடு ஜூலை 1ம் தேதி முதல் 3-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூலை 1-ம் தேதி ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி டெல்லி வரவுள்ளதாக அந்நாட்டு தூதர் ஓனோ கெய்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமரான பின் முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் டகாய்ச்சி பிரதமர் மோடியுடன் உச்சி மாநாட்டை நடத்துவார். இரு தலைவர்களும் வர்த்தக தலைவர்களுடன் ஒரு பெரிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியா-ஜப்பான் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவார்கள் என்று அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,New Delhi ,Sane Takaichi ,16th India-Japan Summit ,India-Japan Summit ,
× RELATED தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை