×

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது காங்கிரசின் சிறப்பு மிக்க இருண்ட அத்தியாயம்: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி,” இன்று காங்கிரஸ் கட்சியின் சரணடைதல் காலவரிசையில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க இருண் அத்தியாயம் பதிவாகி உள்ளது. 1974ம் ஆண்டு இதே நாளில் தான் அப்போதைய காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு அருகில் அமைந்துள்ள கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது.

இதன் விளைவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மக்கள் தங்கள் படகுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றினாலும் அங்கு செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இந்தியாவின் நலன்களை விட்டுக்கொடுக்கும் நீண்ட வரலாற்றை காங்கிரஸ் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சரணடைதல் காலவரிசையானது 1947ம் ஆண்டு இந்தியாவின் பிரிவினை மற்றும் முஸ்லிம் லீக் முன் சரணடைதலுடன் தொடங்கியது. ” என்றார்.

Tags : Katchatheevu ,Sri Lanka ,Congress ,BJP ,New Delhi ,Delhi ,Sudhanshu Trivedi ,Congress party ,Congress… ,
× RELATED குடியுரிமைக்கான முழுமையான சான்றாக...