- தலைமை நிர்வாக அதிகாரி
- ஜாஸ்ஸி
- பிரதமர் மோடி
- அமேசான்
- இந்தியா
- புது தில்லி
- எங்களுக்கு
- ஆண்டி ஜாஸ்ஸி
- மோடி
- தில்லி
புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கட்டமைப்புகளுக்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக 13 பில்லியன் டாலரை (ரூ.1.2 லட்சம் கோடி) முதலீடு செய்ய இருப்பதாக ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்தார்.
இதன் மூலம், 2026 முதல் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அமேசான் நிறுவனம் செய்ய உள்ள மொத்த முதலீடு 48 பில்லியன் டாலராக (ரூ.4.5 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஆண்டி ஜாஸ்ஸியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் சாதனை அளவிலான 48 பில்லியன் டாலர் முதலீட்டை வரவேற்கிறேன்.
இது நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது’’ என்றார். ஜாஸ்ஸி அறிவித்த கூடுதல் 13 பில்லியன் டாலருடன் சேர்த்து இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் ஏஐ, கிளவுட் கட்டமைப்பிற்காக செய்யக் கூடிய மொத்த முதலீடு 21 பில்லியன் டாலராக (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள் 38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதிகளை சாத்தியமாக்கவும், 4 கோடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜாஸ்ஸி கூறினார்.
