பெண்ணிடம் செயின் பறிப்பு 3 வாலிபர்கள் சிக்கினர்

 

மதுரை, ஜூன் 25: மதுரை, எஸ்.ஆலங்குளம், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி(46). இவர் அப்பகுதியில் நடத்தி வரும் கடைக்கு ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அஜித்பிரபு, ஹரிஹரன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் மது போதையில் வந்துள்ளனர். கடையில் பல்வேறு ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கிய அவர்கள், அதற்கான பணத்தை கேட்டபோது தரமறுத்து கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மாரீஸ்வரி கழுத்தில் கிடந்த வெள்ளிச்சங்கிலியைும் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து, அஜித்பிரபு உள்ளிட்ட மூவரையும் நேற்று கைது செய்தனர்.

Related Stories: