×

தடாகம் காப்புக்காடு அருகே பட்டா நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் காட்டு யானை உயிரிழப்பு?

*வனத்துறை தீவிர விசாரணை

துடியலூர் : தடாகம் காப்புக்காடு அருகே பட்டா நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வனச்சரகம் தடாகம் காப்புக்காடு அருகே காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பார்த்தபோது துடியலூர் அடுத்துள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்த அருள் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான இடத்தில் யானை இறந்து கிடப்பதும், டிரான்ஸ்பார்மர் அருகே யானை இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, வனச்சரகர் அருண் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரும், வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இன்று வன கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் இறந்த யானையின் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே யானை உயிரிழப்புக்கு உரிய காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : patta land ,Forest Department Intensive ,Tudyalur ,Gowai Wildlife Pond Reservoir ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...