ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பன்பட்டி ராயக்காவலசை கிராமத்தை சேர்ந்த காளிச்சாமி மனைவி செல்வாத்தாள் (70) இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த செல்வாத்தாள் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்ததும் அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினரை வரவழைத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
