×

சாலை, கால்வாயில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்: பழநி நகராட்சி நடவடிக்கை

 

பழநி, ஜூன் 23: பழநியில் சாலையில், கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டிய பள்ளி, தனிநபருக்கு நகாட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.  பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரில் குப்பைகள் தேங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழநி நகராட்சி ஆணையர் டிட்டோவின் உத்தரவின்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தலின்படி நகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் தூய்மை பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தவிர, குப்பைகள் கொட்டுமிடம் இடங்களில் கோலங்கள் இட்டும், பூங்காக்கள் அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சாலைகள், பொது இடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழநி ரதவீதியில் சாலையில் குப்பைகளை கொட்டிய அரசு உதவிபெறும் பள்ளிக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டிய சத்தியா நகரை சேர்ந்த நபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபோல் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை தூர்வாரவும் நகராட்சி அதிகாரிகள நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Palani Municipality ,Palani ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...