×

வடமதுரை அருகே சாலை தடுப்பில் டூவீலர் மோதி ஓய்வு எஸ்ஐ பலி

 

வடமதுரை, ஜூன் 23: வடமதுரை அருகே சாலை தடுப்பில் டூவீலர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ உயிரிழந்தார். வடமதுரை முத்து நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (65), ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ. இவர் தற்போது அய்யலூரில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் தீத்தாகிழவனூர் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மீது மோதியது. இதில் டூவீலரிலிருந்து தவறி விழுந்த பாலசுப்பிரமணியம் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியம் நேற்று உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : SI ,Vadamadurai ,Balasubramaniam ,Muthu Nagar ,Ayyalur… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...