×

தினமும் உங்களை பத்திதான் பேசுறேன்…. தமிழக முதல்வர் விஜய்க்கு, ரங்கசாமி தொலைபேசியில் வாழ்த்து

 

புதுச்சேரி, ஜூன் 23: தமிழக முதல்வர் விஜய்க்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தினமும் உங்களைப் பத்திதான் பேசிட்டு இருக்கேன் என பேசிய‌ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது முதல்வர் ரங்கசாமி, ‘ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்ல… நல்லா பண்ணுங்க… தினமும் உங்களைப் பத்திதான் பேசிட்டு இருக்கேன், ஒன்னும் பிரச்னை இல்ல… நல்லா இருங்க… வாழ்த்துக்கள்… நான் நேர்ல பார்க்கிறேன்” என்று அன்போடும் நெருக்கத்தோடும் பேசினார். இதற்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்ததுடன், புதுச்சேரி மக்களின் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்று கூறியதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையேயான இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக ரங்கசாமி பயன்படுத்திய அன்பான வார்த்தைகள் மற்றும் அவர்களின் நட்புறவு அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது.

 

Tags : Rangasamy ,Tamil Nadu ,Chief Minister ,Vijay ,Puducherry ,Joseph Vijay… ,
× RELATED மரக்காணம் அருகே நடுக்குப்பம்...