×

நூதன முறையில் 4 பேரிடம் பணம் மோசடி

 

புதுச்சேரி, ஜூன் 19: புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவர், போலியான ஆர்.டி.ஒ. இ-சலான் செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கலிருந்து ரூ.10 ஆயிரம், அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. தவளக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர் ஒருவர், ஆன்லைன் கேம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். திருக்கனூரை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் ரூ.10 ஆயிரம், வைத்திக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.1,836, நெல்லித்தோப்பை சேர்ந்த ஆண் நபர் ரூ.6,240 என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puducherry ,Muthiyalpettai ,Thavalakuppam… ,
× RELATED மரக்காணம் அருகே நடுக்குப்பம்...