×

போலி நகையை அடகு வைக்க முயன்ற சிதம்பரம் வாலிபர் கைது

 

சின்னசேலம், ஜூன் 22: சின்னசேலம் அருகே நைனார்பாளையம் மெயின்ரோடு பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த விக்ரம் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த வேலு(48) என்பவர் கடந்த 20ம்தேதி மாலை குடும்ப செலவுக்காக நைனார்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற பெயரில் 9 கிராம் மோதிரத்தை அடகு வைக்க முயன்றார்.

நகையின்மீது சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் அதனை சோதனை செய்த போது போலி நகை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கீழ்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி வழக்கு பதிவு செய்து போலி நகையை அடகு வைக்க வந்த வேலுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chidambaram ,Chinnasalem ,Vikram ,Rajasthan ,Nainarpalayam Main Road ,Velu ,Kalaivanar Nagar ,Chidambaram, Cuddalore district ,
× RELATED மரக்காணம் அருகே நடுக்குப்பம்...