×

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

 

விருத்தாசலம், ஜூன் 19: விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மணலூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சிவசக்தி(45) அரசு மதுபான பாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து அவரை பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்ததுடன் அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 20 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Virudthasalam ,DSP ,Balakrishnan ,Virthashalam ,Ravichandran ,Sivashakti ,Manalur ,
× RELATED மரக்காணம் அருகே நடுக்குப்பம்...