×

மதுரை கே.கே. நகரில் லாரி மோதியதில் மரம் சாய்ந்து 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

 

மதுரை, ஜூன் 22: மதுரை கே.கே. நகர் சாலையில் நேற்று அதிகாலை லாரி மோதியதில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.
மதுரை கே.கே. நகர் சாலையில் உத்தங்குடி நோக்கி நேற்று அதிகாலை சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அண்ணா நகர் காவல் நிலையம் அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரமாக இருந்த வாகை மரத்தின் மீது மோதியது. இதில், மரம் முறிந்து லாரி மீது சாய்ந்து விழுந்தது. இதில் லாரி சேதமடைந்தது. இந்த விபத்தால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆவின் சந்திப்பு மற்றும் விரகனூர் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. தகவலறிந்ததும் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். சாலையில் இருந்து லாரியும் அகற்றப்பட்டது. இந்த விபத்தால் கே.கே. நகர் சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags : Madurai K.K. Nagar road ,Madurai ,Madurai K.K. Nagar ,Uthangudi ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...