- மதுரை
- ரஞ்சித் குமார்
- ஆதி சிவன் நகர்
- கீழத்துவல், மேலக்குயில்குடி
- இருளாண்டி
- 8வது தெரு, பில்லர் ரோடு, கரடிப்பட்டி.…
மதுரை, ஜூன் 22: மதுரை அருகே கீழத்தூவல் மேலகுயில்குடி ஆதி சிவன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (28). இவர் அயர்ன் வேலை செய்து வந்தார். இவரது உறவினர் கரடிப்பட்டி பில்லர் சாலை 8வது தெருவை சேர்ந்தவர் இருளாண்டி (64). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் தேனி ரோடு பாரதியார் நகர் 5வது தெருவில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இருளாண்டி தான் வைத்திருந்த அரிவாளால் ரஞ்சித் குமாரை வெட்டி கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். தகவலறிந்ததும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருளாண்டியை கைது செய்தனர்.
