×

கூரியர் சேவையில் குட்கா கடத்தல்? போலீசார் கண்காணிக்க கோரிக்கை

 

பழநி, ஜூன் 22: கூரியர் சேவை வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில்லறை கடைகளின் மூலமாக பல இடங்களில் குட்கா, கூல்லிப், கணேஷ், விமல், ஹான்ஸ், ஜர்தா, ஸ்வாகத் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க போலீசார் சில்லறை கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும், கடைகளுக்கும் குட்கா வகைகள் கூரியர் சேவை வழியாக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, போலீசார் கூரியர் நிறுவனங்களில் சோதனைகளில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத கடத்தலுக்கு உடந்தையாக இருக்கக் கூடாதென அறிவுறுத்த வேண்டும். குட்கா பொருட்கள் கூரியர் கொடுக்கப்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gutka ,Palani ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...