அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அரசு நடத்தும் பி.ஜே. மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு முதுகலை முதலாமாண்டு படிக்கும் பயிற்சி மாணவர்களை 2ம் ஆண்டு முதுகலை பயிலும் மாணவர்கள் ராகிங் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ராகிங் தடுப்பு குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2ம் ஆண்டு முதுகலை மாணவர்கள் ராகிங் செய்தது நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரில் ஒருவர் 1 வருடத்துக்கும், மற்ற இருவர் ஆறு மாத காலத்துக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், பாவ்நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியில், எலும்பியல் துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 13 பேர், முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
