×

பிஎம் ஸ்ரீ திட்டம் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அடிபணிந்து விட்டது: எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம்: பிஎம் ஸ்ரீ திட்டத்தில் ஒன்றிய அரசிடம் கேரள அரசு அடிபணிந்து விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ’தேர்தலுக்கு முன் பிஎம் ஸ்ரீ திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் இப்போது ஒன்றிய அரசின் முன்னால் மண்டியிட்டு விட்டார்கள். முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் தான் இந்த இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்க முடியவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறாகும். தேசிய கல்விக் கொள்கையை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அமல்படுத்துவது என்பது தான் காங்கிரசின் கொள்கையாக இருக்கிறது. அதனால் தான் கேரளத்திலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது’ என்றார்.

Tags : Kerala ,PM ,Pinarayi Vijayan Saddal ,Thiruvananthapuram ,Pinarayi Vijayan ,Kerala government ,Union government ,PM Sri ,EU government ,
× RELATED சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 8...