×

பிஎம் கிசான் 23வது தவணைத் தொகை; 9.44 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,880 கோடி நாளை விடுவிப்பு

புதுடெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 23வது தவணைத் தொகையானது 9.44கோடி விவசாயிகளுக்கு நாளை விடுவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாய பயனாளிகளுக்கு 23வது தவணைத் தொகை ஜூன் 20ம் தேதி(நாளை) விடுவிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள 9.44கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.18,880கோடி வழங்கப்பட உள்ளது” என்றார்.

Tags : PM ,New Delhi ,Prime ,Union Agriculture Minister ,Shivraj Singh Chouhan ,
× RELATED 177 டிஎம்சி நீர் திறக்க உறுதி;...