புதுடெல்லி: நீட் மறுதேர்வு முடியும் வரையில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. டெலிகிராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஒரு குறிப்பிட்ட பயனாளர் குழுவிற்காக முழு தளத்தையும் பொறுப்பாக்குவது என்பது பொருத்தமற்றதாகும். இதுபோன்ற நடவடிக்கை 15கோடி இந்தியர்களின் உரிமையை பாதிக்கிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
