×

177 டிஎம்சி நீர் திறக்க உறுதி; மேகதாதுவால் தமிழ்நாடு தான் அதிக பயன் அடையும்: கர்நாடக முதல்வர் உறுதி

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மேகதாது அணை பெங்களூரு குடிநீர் தேவைக்காகவும், அணையில் நீரை சேமித்து போதிய மழை இல்லாத காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதற்காகவும் தான். மேகதாது அணை என் இதயத்திற்கு நெருக்கமானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் இதயம் ஆகும். மேகதாது அணை மூலம் கர்நாடகாவை விட தமிழ்நாடு தான் அதிக பயன்பெறும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடக அரசு உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் பங்கில் இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சொல்லப்போனால் தமிழ்நாட்டிற்கான நீரை முறையாக திறந்துவிடுவதை உறுதி செய்யும். எந்த சூழலிலும் தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திறந்துவிட்டுத்தான் ஆக வேண்டும்.

தமிழ்நாடு அதன் எல்லைக்குள் அணை கட்டினால் அதை கர்நாடகா எதிர்க்காது; தடுக்காது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், பெங்களூரு குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். இத்திட்டத்திற்காக நாங்கள் எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்கவில்லை. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் கர்நாடக பலனடையும். இதன்மூலம் தமிழ்நாடு தான் முதலில் பயன்பெறும்’ என்றார்.

Tags : TMC ,Tamil ,Nadu ,Meghadhatu ,Karnataka ,Chief Minister ,Bengaluru ,dam ,D.K. Shivakumar ,Meghadhatu dam ,Tamil Nadu ,
× RELATED பேனா, பேப்பருக்காக ரூ.3,877 கோடி செலவு செய்த இந்திய வங்கிகள்!