திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 4ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதிக்குப் பின்னர் மழையின் தீவிரம் சற்று குறைந்தது.இந்நிலையில் கேரளத்தில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழையின் தீவிரம் சற்று அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
