- ஹாலந்து
- நார்வே
- ஈராக்
- பாஸ்டன்
- உலகக்கோப்பை கால்பந்து
- பாஸ்டன், அமெரிக்கா
- எர்லிங் ஹாலண்ட்
- உலக கோப்பை
- நார்வே…
பாஸ்டன்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நேற்று நார்வே, ஈராக் அணிகள் மோதின. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றுள்ள நார்வே அணிக்கு எர்லிங் ஹாலண்ட், மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோர் பலமாக உள்ளனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நார்வே அணியின் டேவிட் மோல்லர் வோல்ப் கொடுத்த கிராஸ் பந்தை பெற்றுக்கொண்ட ஹாலண்ட் முதல் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ஈராக்கின் அய்மென் ஹுசைன் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
முதல் பாதியின் இறுதி நேரத்தில் ஈராக் கோல்கீப்பர் ஜலால் ஹசன் செய்த தவறான பாஸை தட்டிப்பறித்த ஹாலண்ட் தனது 2வது கோலை அடித்தார். 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய லியோ ஆஸ்டிகார்ட் ஒரு கோல் அடிக்க நார்வே 3-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஹாலண்ட் தலையால் முட்டிய பந்து ஈராக் வீரர் ஹுசைன் மீது பட்டு ‘ஓன் கோலாக’ மாற நார்வே 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஐ பிரிவில் நார்வே 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செனகலை வீழ்த்திய பிரான்ஸ் அணி 2வது இடத்திலும் உள்ளது.
