×

பிபா உலக கோப்பை கால்பந்து; ஜெர்மனி அணி கோல் மழை: 7-1 என கத்துக்குட்டி குராசோவை சாய்த்தது

 

ஹூஸ்டன்: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்றிரவு நடந்தலீக் போட்டியில், இ பிரிவில் ஜெர்மனி- அறிமுக அணியான குராசோவ் மோதின. விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் 6வது நிமிடத்தில் ஜெர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா முதல் கோலை அடித்தார். 21வது நிமிடத்தில் குராசோவின் லிவானோ கோல் அடிக்க 1-1 என சமன் ஏற்பட்டது. அதன்பின்னர் ஜெர்மனி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

37வதுநிமிடத்தில் நிக்கோ ஸ்க்லோட்டர்பெக், முதல்பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (45+5)காய்ஹாவர்ட்ஸ் கோல் அடிக்க 3-1 என முதல் பாதியில்முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஜமால் முசிபாலா, 67வது நிமடத்தில் நதானியேல் பிரவுன், 77வது நிமிடத்தில் டெனிஸ் உண்டாவ் கோல் அடித்தனர். 87வது நிமிடத்தில் காய்ஹாவர்ட்ஸ் தனது 2வது கோலை அடித்தார். முடிவில்7-1 என ஜெர்மனி அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளை அள்ளியது. அடுத்து வரும் 21ம் தேதி ஐவரி கோஸ்ட் அணியுடன் ஜெர்மனி மோத உள்ளது.

 

Tags : FIFA World Cup football ,Germany ,Curaso ,Houston ,23rd FIFA World Cup football ,Houston, USA, Germany ,Kurasov ,E Division ,Felix Namecha ,
× RELATED கால்பந்து உலக கோப்பை: 7 – 1 என்ற கோல்...