×

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு சொல்ல வேண்டும்: விஜய்க்கு கனிமொழி வேண்டுகோள்

 

சென்னை: தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சில தினங்களுக்கு முன், ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், ‘ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர், குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கிறார்கள்’ என்று கூறியுள்ளார். சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்பு படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும். இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vijay ,Chennai ,Dimuka ,Deputy Secretary General ,Kanimozhi MB ,
× RELATED தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து...