×

41 பேர் பலி வழக்கு: கரூர் ஏடிஎஸ்பியிடம் சிபிஐ விசாரணை

 

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். டெல்லியில் நடந்த சிபிஐ விசாரணையில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மார்ச் முதல் வாரத்தில் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சையது அலி, எஸ்ஐ ரமேஷ் உள்பட 10 போலீசாரிடம் நேற்றுமுன்தினம் விசாரணை நடந்தது. 2வது நாளாக நேற்று சம்பவத்தின்போது பணியில் இருந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், கரூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆர்த்தி உள்ளிட்ட 3 எஸ்ஐகளிடம் சிபிஐ இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விசாரணை நடத்தினார். இதில் மணிவண்ணனிடம் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடந்தது. இவர் கரூர், டெல்லி என சிபிஐ விசாரணைக்கு 10க்கும் அதிகமான முறை ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஆஜராக ஏடிஎஸ்பி பிரேமானந்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் இன்று காலை முக்கிய ஆவணங்களுடன் சிபிஐ முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில போலீசாரும் ஆஜராகினர்.

Tags : KARUR ,Karur Velusamipuram ,Daveka ,Vijay Prasara ,CBI ,Karur Tourist House ,
× RELATED இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை...