- வாசுதேவநல்லூர்
- சிவகிரி
- ரமேஷ் குமார்
- ராஜேந்திரன்
- சங்குபுரம் இந்திரா காலனி
- பரமேஸ்வரி
- சங்கரன்கோவில் காந்திநகர்…
சிவகிரி, ஜூன் 13: வாசுதேவநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாசுதேவநல்லூர் அருகே சங்குபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ் குமார் (32). எலக்ட்ரீசியனான இவர் தனது மனைவியான சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். ரமேஷ் குமார் இந்திரா காலனியில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷ்குமார் வீட்டில் இருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலையில் ரமேஷ்குமாரின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ரமேஷ்குமார் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரமேஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் (65) அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
